tamilnadu

img

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஒ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு?

சென்னை, ஜூன் 27- அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஒ.பன்னீர்செல்வத்தை நீக்க அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நடைபெற்ற நிர்வாகிகள்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.  அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள் ளது. இந்நிலையில் அதிமுக தலை மைக் கழக நிர்வாகிகள் கூட்டம் திங்க ளன்று (ஜூன் 27) நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகி கள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தி ருந்தார். ஆனால் அறிவித்தபடி அக்கட்சி யின் தலைமைக் கழகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற் றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அதிமுக செய்திதொடர்பாளர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகி விட்ட நிலையில், கழ கத்தின் சட்டதிட்ட விதிகளில் இடமி ருக்கும் நிலையில் கழக அவைத் தலை வர் தமிழ்மகன் உசேன் தலைமையில்  தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றுள்ள னர். 4 பேர் கூட்டத்துக்கு வர முடிய வில்லை என்று விளக்கமளித்துள்ள னர். பண்ருட்டி ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லை என்று கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.   5 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தக்  கூட்டத்தில் 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப் பிதழ் தபால் மூலம் அனுப்புவது குறித்து  முடிவு செய்யப்பட்டது. மேலும் நிறைய விவகாரங்கள் குறித்து முடிவு செய்  யப்பட்டுள்ளது. அதெல்லாம் மிகவும் ரகசியமானது. தற்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்புகளாக வரலாமா கூடாதா என்று கட்சிதான் முடிவு செய்யும்.

தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலை யில் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கி ணங்க இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அறிந்தும் அறியாமல் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. கிழிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்தின் பேனரை மாற்று வதற்கு உண்டான நடவடிக்கை நடை பெறுகிறது. துரோகத்தின் அடையாளமாக ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து அதிமுகவிற்கு துரோகம் செய்துள்ளார். துரோகம் என்பது ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த ஒன்று. பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பாரா என்பது குறித்து பொதுக்குழு முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார். இதன் மூலம் 11ஆம் தேதி பொதுக்  குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத் தின் பொருளாளர் பதவி பறிக்கப்படு வது உறுதியாகி இருப்பதாக எடப் பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக. பொதுக்  குழு கூட்டத்திற்கு தடை போட்டு விட  வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலை யில் அவரது பொருளாளர் பதவியை யும் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனி சாமி வகுத்துள்ள புதிய வியூகம் அதி முகவில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

;