tamilnadu

அதிமுக-பாஜக கூட்டணி: கூடா நட்பு கேடாய் முடியும்!

அதிமுக-பாஜக கூட்டணி: கூடா நட்பு கேடாய் முடியும்!'

நெல்லை முபாரக் அறிக்கை

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவ தாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்திருக்கிறார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப் பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைப்ப தற்கு அதிமுக எத்தனை காரணங்களை கூறி னாலும், அவற்றை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இந்தக் கூட்டணிக்கு பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம்  மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டு மின்றி பாமர மக்களும் அறிவார்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பது  பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள்  அரசியல் அடையாளத்தை இழந்து, மக்க ளின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வி யின் பாதையில் நிற்கின்றன. பாஜக, எந்த வழியில் வந்தாலும், யார்  மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில்  வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிரா கரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.