tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி / தஞ்சாவூர், செப்.3 - ஊரக வேலை உறுதித் திட்ட சட்ட விதி களின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனை வருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உட னடியாக வேலையை தொடங்க வேண்டும். விபத்தில் இறக்க நேரிடும் விவசாயத் தொழி லாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10  லட்சம் வழங்க வேண்டும். ஈ.எஸ்.ஐ, பி.எப் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அறி வித்து செயல்படுத்த வேண்டும். தூய்மையான குடிநீர், நிழல் கூடாரம், மருத்துவ உதவிகள் பணித்தளத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  பணி முடிந்த 15 நாட்களில் ஊதியம் வழங்க  வேண்டும். தாமதமாக வழங்கப்படும் ஊதி யத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி வட்டியை சேர்த்து வழங்க வேண்டும். நூறு நாள்  வேலைத் திட்டத்திற்கு, ஒன்றிய அரசு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என  வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் முசிறி, மணப்பாறை, திருவெறும்பூர், மருங்கா புரி, வையம்பட்டி, தொட்டியம் உள்ளிட்ட வட்டார  வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முசிறி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் அசோக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு ஒருங்கிணைப்பாளர் டி.பி. நல்லுசாமி துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டச் செய லாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். ஒன்றியத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறி னார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் தெய்வநீதி தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குருநாதன், கணேசன் ஆகி யோர் பேசினர்.  பின்னர் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மணப்பாறையில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில  பொருளாளர் அ.பழநிசாமி, சிபிஎம் வட்டச் செய லாளர் கோபாலகிருஷ்ணன், சங்க மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர் பாப்பாத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சீனிவாசன், சிஐடியு நிர்வாகிகள் நவ மணி, சுரேஷ் ஆகியோர் பேசினர். பிடிஓ-விடம்  மனுக் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒரு வாரத்தில் அனைவருக்கும் வேலை வழங்க  உறுதி அளிக்கப்பட்டது. வையம்பட்டியில் நடைபெற்ற போராட்டத் தில் ஒன்றியச் செயலாளர் முருகன், அந்தோணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மருங்காபுரியில் விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம், சிஐ டியு மாவட்டத் தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொட்டியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட பொருளாளர் ராமநாதன், மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 6 மையங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிடிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் ஒன்றியத் தலை வர் வி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்சமின் முன்னிலை  வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.