குடியிருப்பு உரிமையை பாதுகாக்க ஆலோசனை
அறந்தாங்கி, ஆக. 19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், குடியிருப்பு உரிமையை பாதுகாக்க, அமைப்பு ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் கர்ணா தலைமை வகித்தார். சமீப காலமாக நீர் நிலை களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல வழக்குகளை தொடுப்பதும், நீதி மன்றம் அத்தகைய குடியிருப்புகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என தீர்ப்பு அளிப்பதும் வழக்கமாகி வரு கிறது. அந்த வகையில் அறந்தாங்கி நகரில் அருகன்குளம், நெடுங் குளம், கொத்தாலசுவர் சுக்கான் குளம், அகில்குளம், வண்ணான் குளம், ஒடைகுளம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் மக்களை நீதி மன்ற உத்தரவு என அறிவித்து குடியிருப்புகளை காலி செய்ய வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கூட்டத்தில் மேற்கண்ட நீதிமன்ற தீர்ப்பை அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். பயன்படாத நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய ஆலோசனை குழு அமைக்க வேண்டும். ஏற்க னவே நீதிமன்றம் உள்பட அரசு அலுவலகங்கள் வகை மாற்றம் செய்தது போல், மக்கள் குடியிருப்பு பகுதிகளையும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை கள் முன்வைக்கப்ட்டன. புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. தலைமை ஒருங்கி ணைப்பாளராக எஸ். கவிவர்மன், தலைவராக அலாவுதீன், செயலாளராக கருணா, பொருளாளராக நந்தினி ரவி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி. சுப்பிரமணியன், கே. தங்கராஜ், தென்றல் கருப்பையா, ஒன்றியச் செயலாளர் நாராய ணமூர்த்தி, நகரச் செயலாளர் அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 2 ஆம் தேதி அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி அம்மா உணவகத்தில் இருந்து பேரணியாகச் சென்று வருவாய் கோட்டாட்சியிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
சீகன்காடு பாசனக்குளத்தை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சீகன்காடு கிராமத்தில், சுமார் 31.58 ஏக்கரில் பாசனக்குளம் உள்ளது. இந்த பாசனக் குளத்தில் பராமரிப்பு இல்லாமல் மதகுகள், நீர் போக்கி கள் அனைத்தும் உடைந்து, சேதமடைந்த நிலையில், குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக வாய்க்காலில் வெளியேறுகிறது. மேலும், சில இடங்களில் பாசன வயல்களை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர், நீர்வளத்துறை, நீர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களில், தண்ணீர் முறை வைக்காமல், அதிகளவில் வந்து கொண்டிருக்கும் நிலை யில், குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பாசனக்குளத்தை தூர்வாரி, நீர்ப்போக்கிகள், மதகுகளை சீரமைத்து, குளத்தில் நீர் நிரப்பித் தர வேண்டும். இப்பகுதி பாசனத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், சீகன்காடு கிராம மக்கள் சார்பில் தர்மசீலன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவு ரயிலுக்கு வரவேற்பு
பாபநாசம், ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில், ஆக.18 ஆம் தேதி முதல் திருப்பதி- ராமேஸ்வரம் - திருப்பதி வாராந்திர விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறி வித்திருந்தது. இதையடுத்து பாபநாசம் ரயில் நிலையத்திற்கு திங்கட்கிழமை வந்த ரயிலுக்கு பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர், கார்டுக்கு பொன்னாடை அணிவித்ததுடன், ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கல்யாண சுந்தரம் எம்.பி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் பிரபு, பாப நாசம் லயன்ஸ் கிளப் பொருளாளர் கணேசன், ரோட்டரி கிளப் தலைவர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.