பெரம்பலூர் நகர் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு
பெரம்பலூர், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகரகமிட்டி சார்பில், பெரம்பலூர் நகர் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் நகரத்தில் தீக்கதிர் நாளிதழுக்கு 6 ஆண்டு சந்தாவும், 1 அரையாண்டு சந்தாவும் என மொத்தம் 7 சந்தா சேர்க்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எ. ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் எம். கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.