ஆவின் பால் கலப்பட வழக்கு ரத்து
சென்னை: அதிமுக ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஆவின் பால் கலப்பட முறைகேடு தொடர்பாக முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. லாரியில் கொண்டு வரப்பட்ட பாலை திருடி விட்டு, தண்ணீர் கலந்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசி ஐடிக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றச்சாட்டு களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி நீதி மன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.
செப்.10 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் செப். 7 முதல் 10 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மாவட்டத் தில் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.8 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்ப தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நலிந்த கலைஞர்கள் 2,500 பேருக்கு கூடுதல் நிதி உதவி
சென்னை: தமிழ் நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 6,542 நலிந்த கலைஞர்கள் மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். முதல மைச்சரின் உத்தரவு படி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், இத்திட்டத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக் கீடு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசால் அமைக்கப் பட்ட தெரிவுக் குழு வால் தேர்ந்தெடுக்கப் பட்ட தகுதிவாய்ந்த 2,500 நலிவுற்ற நிலை யில் வாழும் கலைஞர் களுக்கு மாதாந்திர நிதியுதவியை துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வழங்கி னார்.
ஆவணங்கள் காணாமல் போனால் நடவடிக்கை
சென்னை: சென் னையில் உள்ள மாநில தகவல் ஆணையம், “வருவாய்த் துறை அலுவலகங்களில் ஆவணங்கள் காணா மல் போனால் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போவது தொடர்பாக அன்புவேல் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவை விசாரித்த ஆணையம், இவ்வாறு தெரிவித்துள்ளது. கோரிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று தகவல் அலு வலர் கூறுவது அலட்சி யப் போக்கு என்றும் ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.