சென்னை,மார்ச் 15- நெல்லை, கன்னியா குமரி உள்ளிட்ட சில மாவட் டங்களைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை உத்தரவு பெற்ற மாணவர்களை கல்லூரியில் சேர்க்காமல் அனுமதி மறுத் தது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத் திற்கு புகார்கள் வந் துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் இயக்குனரக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.