tamilnadu

குடிமராத்துப்பணிகளில் முறைகேடு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மதுரை:
கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் குடிமராமத்துப் பணிகளின் நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும்படி இணையதளத்தில் வெளியிடவேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்மாய்களில்குடிமராமத்துப் பணிகள் ஒதுக்கீடுசெய்ததை ரத்து செய்ய வேண் டும். முறைப்படி தேர்தல் நடத்தி குடிமராமத்துப் பணிகளை ஒதுக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இராமநாதபுரதை சேர்ந்த போஸ் உள் ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை புதனன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:-தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஒரு முழுமையான திட் டத்தை தயாரிக்க வேண்டும். அதில்  நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள்மற்றும் வரத்துக் கால்வாய்களைஅடையாளம் காண்பது உள்ளிட்டபணிகளை மேற்கொள்ள வேண்டும். 

நில அளவை, கிராம வரைபடத்தின்படி கால்வாய்களை அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினர் ஈடுபட வேண் டும். கால்வாய்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் மழை நீர் மூலம் விவசாயிகள் பலனடைய வேண்டும்.அதற்கேற்றார்போல் கடைமடைவரை பணிகளை மேற்கொள்ளவேண்டும். எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களில்  நீர்நிலைகள் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டும், முறைகேடுகளாக நீர் நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அவற்றின் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடிஆர், ‘அ’ பதிவேட்டின்அடிப்படையில், நீர்நிலைகள்இருப்பதை உறுதி செய்ய வேண் டும். அளவு குறைந்திருந்தால் அதற்குரிய காரணத்தை பதிவுசெய்யவேண்டும். ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற வேண்டும். நீர்நிலைகளுக்கு நீர் வரத்து இல்லாவிட்டால் அதற்கான காரணத் தைக் கண்டறிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்துப் பணியில் மரக்கன்று நடுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான்நீர்நிலைகளின் கரைகள் வலுவாக இருக்கும்.

பாசனக் குழுக்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்து, நீர் நிலைகள் மற்றும் குடிமராமத்து தொடர்பான விபரங்களை வெப்சைட்டில் வெளியிட வேண்டும். அதில் இடம், எந்த வகை, வரைபடம், விரிவாக்கம், நீர் பிடிப்பு பகுதி, கால்வாய், கொள்ளளவு, மதகு பராமரித்தல், சர்வேஎண் உள்ளிட்ட விபரங்கள் இருக்க வேண்டும். சர்வே விபரத்தில் ஆக்கிரமிப்பு விபரமும் இருக்க வேண் டும். இந்த விபரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். கருத்துக்கள் கூறஉரிய வசதி ஏற்படுத்த வேண்டும்.இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலம் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள் ளார்.

;