tamilnadu

img

தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிடுக! அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிடுக! அனைத்து மத்திய  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், செப். 23- 
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
150 ஆண்டுகளுக்கு மேல் போராடி பெற்ற தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு பறித்தும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், திருத்திய சட்டத் தொகுப்புகளை விவாதமின்றி எதேச்ச அதிகாரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய செப்.22 ஆம் நாளை தொழிலாளர் வர்க்கத்தின் கருப்பு தினமான கடைப்பிடித்து, 4 தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜய குமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.