tamilnadu

img

விதிகளை மீறி ‘விக்சித் பாரத்’

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசிடமிருந்து பலரது வாட்ஸ் ஆப்புக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் ஆகும்.  மக்களவைத் தேர்தல் தேதி இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாகப் பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘விக்சித் பாரத் சம்பார்க்’ என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தியில், அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து மக்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம்  கருத்துக்களைக் கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் செய்தி மூலம் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

;