tamilnadu

img

மயிலாடுதுறையில் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜன், 20 ஆண்டு சந்தாவிற்கான ரூ.40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், சி.விஜயகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டபிள்யூ.காபிரியேல், வீ.எம்.சரவணன், விவசாய தொழிலாளர் சங்க குத்தாலம் ஒன்றிய செயலாளர் கே.என்.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.