tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

முதலமைச்சரிடம் சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்

சென்னை, ஆக.6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் புதனன்று (ஆக. 6) நேரில் சந்தித்தனர். மருத்துவமனை சிகிச்சைக்குப் பின், வழக்கம்போல தமது அன் றாடப் பணிகளை முதல்வர் கவ னித்து வரும் நிலையில், அவரிடம்  உடல் நலம் குறித்து தலைவர்கள் அக்கறையுடன் கேட்டறிந்தனர்.  பின்னர், தமிழகத்தின் நீண்ட காலமாக அவலமாக மாறியிருக்  கும், “சாதி ஆணவப் படுகொலை களைத் தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றையும் முதலமைச்சரிடம் அளித்தனர். முதல்வர் உடனான சந்திப்  பிற்குப் பிறகு, பெ. சண்முகம்,  இரா. முத்தரசன், தொல். திருமா வளவன் எம்.பி. ஆகிய தலை வர்கள், செய்தியாளர்களையும் சந்  தித்தனர். அப்போது, தங்களின் கடி தம் குறித்து தலைவர்கள் கூறிய தாவது: பெ.சண்முகம் திருநெல்வேலியில் கவின்  செல்வகணேஷ் படுகொலை யை தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை தொடர்பாக விவா தம் நடக்கிறது. இத்தகைய சூழ லில் சாதி ஆணவக் கொலைகளை  தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண் டும் என்று முதலமைச்சருடனான இந்த சந்திப்பின்போது 3 கட்சி களின் தலைவர்களும் எடுத்து ரைத்தோம். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநி லங்களில் இத்தகைய சட்டங்கள்  நடைமுறையில் உள்ளது. இத்த கைய சட்டத்தின் தேவையை, தேசிய மகளிர் ஆணையம், உச்ச  நீதிமன்ற - உயர் நீதிமன்றத் தீர்ப்பு கள், சமூக செயற்பட்டாளர்கள் என  அனைத்துத் தரப்பினரும் வலி யுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு  அரசும், சாதி ஆணவக் கொலை களைத் தடுக்க, தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை  எடுத்துரைத்தோம். சாதி ஆணவப் படுகொலை கள் இந்தியா முழுவதும் அதி கரித்துள்ளது; தமிழகத்திலும் அதி கரித்துள்ளது. தற்போதுள்ள சட்  டங்கள் ஆணவக் கொலைகளை தடுப்பதாகவும், குற்றச் செயல்  களில் ஈடுபடுகிற அனைவரையும் தண்டிக்கக் கூடியதாகவும் இல்லை. எனவே, சாதி ஆணவக்  கொலையில் தொடர்புடைய அனைவரையும் உள்ளடக்கி தண்டிக்கக் கூடிய ஒருங்கி ணைந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்றோம். இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இரா.முத்தரசன் பட்டியலின இளைஞர், பிசி அல்லது எம்பிசி பெண்ணை காத லிப்பதால் இத்தகைய படு கொலை நடைபெறுகிறது என்பது  மட்டும் உண்மையல்ல. ஒரே சாதி யில் காதலித்தால் கூட குடும்ப கவு ரவம் பாதிக்கப்படுவதாக கருது கிற மோசமான மனோ நிலை உள்  ளது. அதன் காரணமாகவே இத்த கைய கொலைகள் அதிகரித்து வரு கிறது. தமிழ்நாடு பல்வேறு அம்  சங்களில் வளர்ச்சி பெற்றிருந்தா லும், சாதிய  உணர்வில் இருந்து  வெளி வர வேண்டும். மக்களி டத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுவ தோடு, சட்டப் பூர்வமாகவும் தடுக்க வேண்டும். இதன் தேவையை  அரசும், முதலமைச்சரும் உண ர்ந்து இருக்கிறார்கள். ஆணவத்  தோடு இருக்கக் கூடியவர் களுக்கு அச்சத்தை உரு வாக்கும் வகையில் அந்தச் சட்டம்  இருக்கும் என்று எதிர்பார்க்கி றோம். தொல்.திருமாவளவன் எம்.பி. ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் தேவை  என்று இந்திய சட்டம் ஆணை யம், தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 2015-ஆம்  ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் உறுப்பினர் அ. சவுந்தர ராசன் சட்டமன்றத்தில் ‘கவுரவக் கொலைகள் தடுப்பு’ தனிநபர் மசோ தாவை கொண்டு வந்தார். 2017-இல்  மாநிலங்களவையில்  விஜய்சாய் ரெட்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். உச்சநீதிமன்  றம், உயர் நீதிமன்றமும் சிறப்புச்  சட்டம் கொண்டு வர உத்தரவிட்டுள்  ளது. அதன்படி ராஜஸ்தானில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இவற்றையெல்லாம் முத லமைச்சரிடம் சுட்டிக்காட்டினோம். இது ஒரு சமூகப் பிரச்சனை. தேசிய அளவில் சட்டம் தேவை என்றாலும் கூட, மாநில அரசு சட்  டம் இயற்ற அதிகாரம் உள்ளதால்  முதலமைச்சரிடம் கோரினோம். கல்லுடைக்கும் தொழிலாளர்  களுக்கு தனி நலவாரியம் வேண்  டும், ரிப்பன் மாளிகையில் போரா டும் தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பணி வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு தலைவர்கள் கூறி னர். இச்சந்திப்பின்போது, துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின், அமைச்சர்கள் கே.என். நேரு,  எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்  பினர் கே. சாமுவேல்ராஜ், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் சந்தானம், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலையச் செயலா ளர் பாலசிங்கம் ஆகியோர் உட னிருந்தனர்.