பிரபல செய்தி நிறுவனமான ஏபிபி மக்களவை தேர்த லை முன்னிட்டு சிறப்பு விவாத நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தது. இந்த விவாதத்தில் தெலு ங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகளும் எம்எல்சியான கவிதா, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாடு பாஜக தலை வர் அண்ணாமலை மற்றும் ஏபிபி சேனல் தொகுப்பாளர் என 4 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்நிலையில், அண்ணா மலையை நோக்கி கவிதா,”பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் தனது 56 அங்குல மார்பைப் பற்றி பேசி யாரையும் உள்ளே நுழைய விட மாட்டோம் எனக் கூறினார். அப்படி யென்றால் அருணாச்சலப்பிரதேச த்தில் நடப்பது என்ன? தெலுங்கா னா அல்லது தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? தமிழ்நாட்டில் உள்ள மதுரை எய்ம்ஸ் நடைமுறை க்கு வரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கேள்விகள் எழும்போதெல் லாம் பாஜகவினர் எப்போதும் பிரச்சனையை திசை திருப்பு கிறார்கள் இல்லையா? ஒன்றிய அரசு ஏன் தேசிய திட்டங்களை உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கி யது? தமிழ்நாடு அல்லது தெலுங்கா னாவுக்கு வழங்காதது ஏன்?தெலு ங்கானாவுக்கு எந்த ஒரு சிறப்பு திட்டமும் வரவில்லை. உண்மை யா? இல்லையா?
கார்ப்பரேட் நிறு வனங்களின் ரூ.12 லட்சம்கோடி கடனை தள்ளுபடி செய்தீர்கள்? ஆனால் 10 ஆண்டுகளில் விவசாயி களின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையே ஏன் என்று விளக்கம் அளிக்க முடியுமா? இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருவர் இருக்கிறார். அவர் கிரிக்கெட் வீரரும் கிடையாது. ஒரு கட்சியின் தலைவர் மகன்தான் (அமித்ஷா மகன் ஜெய்ஷா) அந்த பதவி யில் இருக்கிறார். ஆனால் நீங்க தான் வாரிசு அரசியல் பற்றி பேசு கிறீர்கள்? சிந்தியா குடும்ப அரசியல் வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா வை வைத்துதான் மத்தியப்பிர தேசத்தில் ஆட்சியை கவிழ்த்தீர் கள். அது வாரிசு அரசியல் இல்லையா? முன்பு திமுக, சிவசேனாவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. அப்போது வாரிசு அரசியல் தெரிய வில்லையா? இவ்வளவு ஏன் இப்ப இருக்கிற உங்க ஆந்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி என்.டி.ராமாராவ் மகள்தானே அவர் உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? உங்க ளுக்கு வசதிப்பட்டால் வாரிசு அர சியலை விமர்சிப்பீங்க? உங்களு க்கு வசதிப்பட்டால் வாரிசு அரசி யலை ஏற்றுக் கொள்வீர்களா? தென்னிந்தியாவில் பாஜக வுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது. ஜீரோ சீட்தான் கிடைக்கும். நாங்க அதுக்குதான் வேலை செய்யு றோம். தென்னிந்தியாவுக்கு தேவை திட்டங்கள் மட்டுமே” என அண்ணாமலையை தனது கேள்விக் கணைகளால் புரட்டியெடுத்தார் கவிதா. கவிதாவின் கேள்விகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்காமல் திக்கி திணறினார். இதுதொடர்பான வீடியோ டாப் டிரெண்டிங்கில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.