tamilnadu

img

இடதுசாரி ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் தீக்கதிர் - இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சியின் நாளிதழ் தீக்கதிர்” வரும் செப்டம்பர் - 22 நாள் முதல்  திருநெல்வேலியில் இருந்து  புதிய பதிப்பை  கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்ற பெருமை பெற்றதும், தொழிலாளி வர்க்கத்தின் தலைநகாக விளங்கி வரு வதுமான கோயம்புத்தூரில்  நிதி திரட்டி 1963 ஜூன்  29 ஆம் தேதி வார இதழாக வெளியிடப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வு களின் மீது நடந்த கடுமையான, தீவிர மான வாதப் பிரதிவாதங்களில் ‘‘தீக்கதிர்’’ முக்கிய பங்காற்றியது. கடந்து போன 60 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் இன்று ‘‘இடது சாரிகளை’’ ஒரே அணியில் நிறுத்தி யுள்ளன. ஆம், மதவெறி, சாதி வெறி பிடித்து அலையும் ‘‘வலதுசாரி’’  வகுப்புவாத பேர பாயம் பெரும் சவாலாக முன்வந்துள்ளது. உழைப்பின் பலனை அபகரித்து, தனியுடைமை உரிமை கோரும் நிலப்பிர புத்துவ -  முதலாளித்துவ சக்திகள் இன்று, பன்னாட்டு நிதி மூலதனம், பெரும் குழும நிறுவனங்களாக வளர்ச்சி பெற்று,

உல கத்தைச் சுருட்டி விழுங்கும் ‘‘ஆக்டோ பஸ்’’ விலங்காக செயல்பட்டுவருகின்றன. இந்த பன்னாட்டு குழும  நிறுவனங் களும், நிதி மூலதனமும்  -   சனாதனம், வர்ணாசிரமம் என்ற முறையில் கட்டமை க்கப்பட்டுள்ள  சாதிய அடுக்குமுறை சமூக அமைப்பை பாதுகாக்கும் பிற்போ க்கு  கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமரச் செய்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் முறை யில் வகுப்புவாத சக்திகள் அறுதிப் பெரும் பான்மை பெற்று, அரசு அதிகாரத்தை பெற்றதன் மூலம்  நாட்டின் அரசியல் திசைவழி திட்டவட்டமாக  வலதுபக்கம்  திருப்பியது. கடந்த பத்தாண்டு காலத்தில் நாடு இதுவரை கண்டிராத பேராபத்தின் விளிம்பிற்கு  தள்ளப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதும், உரு வாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் மூலம் மாநிலங்கள் இணைந்த ஒன்றி யமாக ‘‘இந்தியா’’ கட்டமைக்கப்பட்டது. ஒன்றிய அரசை வழி நடத்தும் நாடாளுமன்றம் மற்றும்  மாநிலங்களில் அரசு நிர்வாகத்தை மேற்கொள்ளும் சட்ட மன்றங்கள் வயது வந்த (முதலில் 21 வயது பின்னர் 18 வயது) குடிமக்கள் வாக்களித்து, பிரதிநிதிகளை தேர்வு செய்து, ஆட்சி நடத்தும் மக்களாட்சி முறை வழங்கப்பட்டது. இன்று நாடாளுமன்ற நடைமுறை கள் புறக்கணிக்கப்படுகின்றன. குடி மக்கள் வாக்களித்து பிரதிநிதிகளை தேர்வு செய்யும் அரசியல் உரிமை குறுக்கி வெட்டி பறிக்கப்படுகின்றன.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு,  அதிகாரங்கள் மையப்படுத்தி குவிக்கப் படுகின்றன. காஷ்மீர் மாநிலம் உடைத்து பிளக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநி லத்தில் இரட்டை என்ஜின் அரசு மக்கள் மீது யுத்தம் நடத்தி வருகிறது . எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகைகள் போட்டி அரசாங்க செயலக மாக மாற்றப்பட்டுள்ளன. இவை சட்டத் தின் ஆட்சிக்கான எல்லைகளை அத்து மீறும் செயல்களுக்கு  ரத்த சாட்சிகளாக நிற்கின்றன. நாட்டின் தொழிலாளி வர்க்கம் நூறாண்டு காலம் போராடிப் பெற்ற, பாது காத்து வந்த சட்டப்பூர்வ உரிமைகள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. ஆம், நடைமுறை யில் இருந்த தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து விட்டு, தொழிலாளர்களை மூலதனத்தின் நவீன கொத்தடிமை களாக மாற்றும் நான்கு நெறித் தொகுப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராடி நிறை வேற்றிய நில உச்சவரம்பு சட்டங்களை அர்த்தமிழக்கச் செய்து, விவசாய நிலங் களை உழவர்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கும், விவசாயிகள் விரோத வேளாண் வணிக சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நாட்டின் எதிர்காலம் பேரிடர் சூழ்ந்து நிற்கும் இந்த நெருக்கடி மிகுந்த காலத் தில் நாட்டின் மதச்சார்பற்ற பண்பை யும், வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும் முன்னெடுத்து வரும் ஜனநா யக சக்திகள், இடதுசாரி கட்சிகள், கூட்டா ட்சி கோட்பாடுகளில் நம்பிக்கையும் பற்றும் கொண்ட மாநில கட்சிகள்  என  அனைத்தும் ஒன்றுபட்டு இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான “இந்தி யா” கூட்டணியாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணி நாளும், பொழுதும்  வளர்த்தும், வலிமை பெற்றும் வருவது நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கை யை, பேரெழுச்சியை உருவாக்கி வரு கிறது.   இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சி யை மேலும் ஊக்கப்படுத்தும் பணியில் தீக்கதிர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பும் தனது வரலாற்றுக் கடமை யினை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துகிறோம்.