tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு : சேலத்தில் 300 பேர் கொண்ட வரவேற்புக்குழு

சேலம், பிப். 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது.  இம்மாநாட்டு பணிகளை வெற்றிகரமாக நடத்திட, வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் சனியன்று நடைபெற்றது. வரவேற்புக் குழு அமைப்பு பேரவை கூட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார் தலைமை ஏற்றார். கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் மாநாட்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து பேரணி மற்றும் செந்தொண்டர் அணிவகுப்பு, சுவர் விளம்பரங்கள், பிரச்சாரங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து 300 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழு ஒருங்கிணைப்பாளராக செ.முத்துக்கண்ணன் தேர்வு செய்யப் பட்டார்.