இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து
சென்னை: திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவை யொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளைய ராஜா பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில், நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீடியோ செய்தியில், “இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கிணைந்த மாமனிதர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியலிசை, மக்க ளிசை இவற்றுக்கிடையே நிலவிய வேறுபாடுகளை ஒன்றாக்கிய இசை மேதை. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி” என்று பாராட்டினார்.
போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை முடிவு
சென்னை: பிரபல ஜவுளிக் கடை நிறுவனமான போத்தீ ஸில் நான்கு நாட்கள் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சோதனையில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18.2 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 1977 இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது நான்கு தலைமுறைகளாக இயங்கி வருகிறது. ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 25 இடங்களில், 12 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது. சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து கொள்முதல் ஆவ ணங்கள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ரூ.12 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிக விண்ணப்பங்கள்
சென்னை: நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெறும் ஆசிரி யர் தகுதித் தேர்வுக்கு கடந்த முறையை விட 17 சதவீதம் அதிகம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 4.77 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை நடந்த 6 டெட் தேர்வு களில் 2014-இல் அதிகபட்சமாக 6.50 லட்சம் பேர் விண்ணப் பித்திருந்தனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் ஆசிரியராக பணியாற்றவும் பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்று நீதிமன்றம் உத்தர விட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கூடுதல் மின்சாரம் கிடைக்கும்
சென்னை: வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கவுள்ளது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அனல்மின் நிலையம் மற்றும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகிய இரண்டும் முடியும் தருவாயில் உள்ளதால், கோடைக்கால மின் நெருக்கடியை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
சென்னை, செப்.15 - பாமக தலைவராக அன்புமணி ராமதாஸைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். அன்புமணி தலைமையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தைக் கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அன்புமணியை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கட்சியின் கொடி மற்றும் மாம்பழச் சின்னத்தைப் பயன்படுத்த முடியும் என்று பாலு தெரி வித்தார். இதனால் அன்புமணி ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, ராமதாஸுக்கு ஆதரவு தெரி வித்துள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மதுரை: நிகிதா கொடுத்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர். நிகிதா நகை திருட்டு தொ டர்பாக, தனிப்படை காவல் விசாரணையில் ஜூன் 28 அன்று மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், நிகிதா நகை திருட்டு வழக்கையும் விசா ரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. அதன்படி, 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்
அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்: கனமழை எச்சரிக்கை
சென்னை, செப். 15- வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று (செப்.16) ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்.17 ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப் பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன மழை பெய்யக்கூடும். செப்.18 ஆம் தேதி சேலம், திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புது வையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.19 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், செப்.20 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றா வது வாரத்திலேயே தொடங்கி விடும் என்றும், 2026 ஜனவரி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவாகும் என்றும், வழக்கத்தைவிட நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
193 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
சென்னை: அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 193 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலு வலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முத லமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல்துறை யில் ஏட்டு முதல் எஸ்பி வரை 150 பேர், தீய ணைப்புத் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரை 22 பேர், சிறைத்துறை யில் 10 பேர், ஊர்க்கா வல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவு 2 பேர், தடய அறிவியல் துறையில் 4 பேர் என மொத்தம் 193 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை தீ விபத்தில் 32 நோயாளி களை காப்பாற்றிய அலு வலர்கள் மற்றும் வைகை ஆற்றில் மூழ்கிய சிறு வனைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு அண்ணா வீர தீர பதக்கங்கள் அறி விக்கப்பட்டுள்ளது.