தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக வந்து பாலம் கட்டக் கோரிக்கை
கோவை, அக்.16- ஒண்டிப்புதூர் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக வந்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். கோவை ஒண்டிப்புதூரையடுத்த, சூர்யா நகர் பகுதியில் உள்ள கடவு எண் 3 இல் ரயில்வே பாலம் அமைக்கக்கோரி, குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் அப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று ஒண்டிப்புதூர் சிந்தா மணி மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒண்டிபுதூர் சிவ லிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகர், சக்தி நகர், கோமதி நகர் குடியிருப்போர் நலச் சங் கம் சார்பில் கடவு எண் 3 இல் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். அல் லது சாலையை அகலப்படுத்த வேண் டும் என வலியுறுத்தி ரயில்வே கேட் பகுதியில் இருந்து தாம்பூல தட்டுடன் கோரிக்கை பதாகைகளை ஏந்தி 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர். அப்போது மாநகராட்சி மேயர் ஆர். ரங்கநாயகி, கிழக்கு மண்டல ஆணை யர், கோவை தெற்கு வட்டாட்சியர் ஆகி யோர் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு இக்கோரிக்கை சம்பந்தமாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இந்த கவன ஈர்ப்பு இயக்கத் தில், குடியிருப்போர் நலச் சங்க ஒருங் கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன், தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் சண்மு கம். சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
