வண்ணக் கிளியே மரப்பொந்தில்
வாழ எனக்கு இடங்கொடு!
சின்னத் தூக்கணாங் குருவியே
சிறிய கூட்டில் இடங்கொடு!
கருப்புக் காகமே உன்வீட்டில்
கலந்து வாழ இடங்கொடு!
சீறும் பாம்பே உன்பொந்தில்
சிறிதாய்க் கொஞ்சம் இடங்கொடு!
காட்டின் அரசே சிங்கமே
காட்டுக் குகையில் இடங்கொடு!
மூட்டை சுமக்கும் நத்தையே
முதுகில் எனக்கும் இடங்கொடு!
எங்கள் மனத்தில் உங்களுக்கு
ஏற்ற இடத்தைத் தருகின்றோம்!
பொங்கும் அன்பால் காட்டிற்குப்
பொழுதைக் கழிக்க வருகின்றோம்!
உங்கள் வீட்டைக் கொள்ளையிடும்
உளுத்தர் தம்மை விரட்டிவிடு!
பொங்கும் வளத்தைச் சூரையிடும்
பொல்லா தவரைத் துரத்திவிடு!