மாநில அளவிலான போட்டிக்கு சேலத்திலிருந்து 880 பேர் தேர்வு
சேலம், செப்.13- முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க சேலத்திலிருந்து 880 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் பதக்கங்களை வழங்கி பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 2025 - 26 ஆம் ஆண்டிற் கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 54,157 பேர் பதிவுசெய்து, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளி கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவு களில் 15 விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 2,640 விளையாட்டு வீரர், வீராங்க னைகளுக்கு ரூ.42.08 லட்சம் பரிசுத்தொகைகள் தொடர்பு டையவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள் ளது. மேலும், மாநில அளவிலான போட்டிக்கு சேலத்திலி ருந்து 880 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்றார். இந்நி கழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, கூடுதல் ஆட்சியர் நே.பொன்மணி, உதவி ஆட்சியர் விவேக் யாதவ், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) குருராஜன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.எஸ்.சிவரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.