66 ஆயிரம் தொழில் முனைவோருக்கு ரூ. 5,490 கோடி மதிப்பில் வங்கிக் கடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
சென்னை, ஆக. 27- சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 2,133.26 கோடி அரசு மானியத்துடன் ரூ. 5490.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு 66,018 புதிய தொழில் முனைவோர் உரு வாக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். மாவட்ட தொழில் மையங்களின் பொதுமேலாளர்கள் உட னான கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “6 வகையான சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் மற்றும் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், உலக முதலீட்டா ளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங் களுக்கான இலக்கினை விரைவில் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த 2023-24 ஆம் ஆண்டு தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 2,970 பயனாளிகளுக்கு ரூ. 324 கோடி மானியத்துடன் ரூ. 581 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 3,452 பய னாளிகளுக்கு ரூ. 13.45 கோடி மானியத்துடன் ரூ. 64.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் துறை சார்பில் ரூ. 63 ஆயிரத்து 573 கோடியே 11 லட்சம் முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2,610 நிறுவனங்கள் ரூ. 27 ஆயி ரத்து 312 கோடியே 26 லட்சம் முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன்மூலம் 1,02,061 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.