தேனி, டிச.9- தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 974 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தேனி ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீ கரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வாக் காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், கூடலூர், கம்பம் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 542 ஆண் வாக் காளர்களும், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்களும், 98 இதரர் வாக் காளர்களும் என மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 633 வாக்காளர்கள் உள்ளனர். இதே போல் 22 பேரூராட்சிகளிலும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 127 ஆண் வாக்கா ளர்களும், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும், 31 இதர வாக்கா ளர்களும் சேர்ந்து மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 341 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் 6 நகராட்சி, 22 பேரூராட்சி களிலும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 669 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 15 ஆயிரத்து 176 பெண் வாக்கா ளர்களும், 129 இதர வாக்காளர்களும் என மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரத்து 974 வாக் காளர்கள் உள்ளனர். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சி.தங்க ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.