tamilnadu

img

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்: பழனியில் கேரளத்திற்கு 5 ஏக்கர் நிலம்

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்:  பழனியில் கேரளத்திற்கு 5 ஏக்கர் நிலம்

சென்னை, செப். 23 - சபரிமலையில் தமிழக அரசுக்கு 5 ஏக்கர் நிலம் கேட்டு உள்ளதாகவும், அதற்குப் பதிலாக பழனியில் கேரள அரசுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாகவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அதில்,  “கண்ணகி கோவில் கட்டவும், கோவிலுக்கு செல்லும் வழிப் பாதையை செப்பனிடவும் அனுமதி அளிக்க வேண்டும் என கேரள மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில், 30 சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு வசதி ஏற்படுத்துவதற்காக, சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம்” என்றார். அத்துடன், அய்யப்பன் கோவில் விழாக் காலங்களில், தமிழகத்தில் இருந்து செல்வோருக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில் இருவரை நியமித்துள்ளதாகவும், அவர்களுக்கு அறை, உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.