தமிழக - புதுச்சேரி மீனவர்கள் 47 பேர் சிறைப்பிடிப்பு
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
இராமேஸ்வரம்/ காரைக்கால், அக். 9 - இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்ததாகக் கூறி இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், காரைக் காலைச் சேர்ந்த 17 மீனவர்கள் என மொத்தம் 47 பேரை 5 விசைப்படகு களுடன் இலங்கை கடற்படை சிறைப் பிடித்துச் சென்றுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கட லுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டி ருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளையும் அதி லிருந்த 30 மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட் படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது, இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 17 மீனவர் களையும் கைது செய்தனர். இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகா மிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள னர். ஒரே நாளில் நடந்த இந்தச் சம்பவம் தமிழக மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர் களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் இலங்கை
கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “2025 ஆம் ஆண்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.