லடாக் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைக்கு 4 பேர் பலி!
ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்
புதுதில்லி, செப். 25 - லடாக் மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் கீழ் உள்ள யூனியன் பிரதேச நிர்வாகம் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரமான அடக்கு முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 6 ஆண்டுகளாக நடக்கும் போராட்டம் லடாக் மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் கீழ் உள்ள யூனியன் பிரதேச நிர்வாகம் கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான அடக்குமுறை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. இந்த வன்முறை - அடக்குமுறையின் கார ணமாக நான்கு உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு இருக்கின்றன. பலர் காயம் அடைந்துள்ளனர். புறக்கணிக்கப்படும் லடாக் மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக, லடாக் மக்கள் முழுமையாக அதிகாரம் பெற்ற சட்டமன்றத்து டன் கூடிய மாநில அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர், அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் இப்பகுதியைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இது பல வடமேற்கு மாநி லங்களில் மக்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆகும். இவற்றைத்தான் லடாக் மக்களும் கோரி வருகின்றனர். இத னை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கோரிக்கைகள் மீது அலட்சியம் கடந்த 3 ஆண்டுகளாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் மூலம் தங்கள் நியாயமான கோ ரிக்கைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தி யதாலும், இந்தக் கவலைகளைத் தீர்க்க மறுத்த தாலும் விரக்தியடைந்தே, ‘லே அபெக்ஸ் பாடி’ (Leh Apex Body) என்னும் அமைப்பும் மற்றும் பல மக்கள் அமைப்புகளும் 15 நாட்கள் நீடித்த அமைதியான உண்ணாவிரதப் போராட்ட த்தைத் தொடங்கின. லடாக்கின் பாரம்பரிய அமைதிகுலைப்பு இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு உண்ணாவிரதப் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது. இது மக்களிடையே பரவலான போராட்டங் களுக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுத் தது. பாரம்பரியமாக அமைதி நிலவக் கூடிய லடாக் பகுதியில், வன்முறை ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய ஒன்றிய அரசு, இப்போது போராட்டக்காரர்களைக் குறை கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் எனவே, அனைத்து அடக்குமுறை நட வடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி விட்டு, இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் அர்த்த முள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காவல்துறையின் அடக்கு முறையில் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)