சென்னை, செப்.30- இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவ ரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழ மையன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியர சுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், வேளாண் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பி னரும் இரங்கல் தெரிவித்தனர். வெள்ளியன்று, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமி நாதன் அறக்கட்டளை ஆராய்ச்சி வளாகத்தில் வைக்கப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து, குடும் பத்தினரின் இறுதிச் சடங்குகளுக் குப் பிறகு, தரமணி ஆராய்ச்சி நிறு வனத்திலிருந்து எம்.எஸ். சுவாமி நாதனின் உடல் காலை 11 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 12 மணிக்கு பெசண்ட் நகர் மயா னத்தில் எரியூட்டப்பட்டது. அவரது உடலுக்கு மொத்தம் 16 காவலர்களில் 10 காவலர் கள் 3 முறை வான்நோக்கி துப்பாக்கி யால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர்.
கேரள அமைச்சர்கள் -சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!
முன்னதாக பசுமைப் புரட்சி யின் தந்தையும், வேளாண் விஞ் ஞானியுமான எம்.எஸ். சுவாமி நாதன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி யில், கேரள திட்டக்குழு தலைவர் வி.கே. ராமச்சந்திரன், இந்து குழு மத்தைச் சேர்ந்த என். ராம், பேராசி ரியர்கள் வீ.பா. ஆத்ரேயா, ருக்மணி, டி. ஜெயராமன், அன்பு வாகினி உள்பட அவருக்கு நெருக்க மான விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கேரள மாநில அரசு சார்பில், அம்மாநில அமைச்சர்கள் பி. பிர சாத் (வேளாண்துறை), கே. கிருஷ்ணன்குட்டி (மின்சாரத் துறை), கொடிக்குன்னில் சுரேஷ் எம்.பி. (மான்கொம்பு - குட்டநாடு), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொண்டு எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.