tamilnadu

img

கர்நாடகாவில் முதன்முறை காளை ஊர்வலத்தில்  3 பேர் பலி

கர்நாடகாவில் முதன்முறை காளை ஊர்வலத்தில்  3 பேர் பலி

கர்நாடக மாநிலத்தின் தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியாக புதன்கிழமை அன்று காவேரி மாவட்டத்தில் காளை ஊர்வலங்கள் (கோப்பரி ஹோரி ஹப்பா), காளை அவிழ்த்து விடும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் காளை அடக்கும் செயல்களும் அரங்கேறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவேரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற காளை ஊர்வலத்தில், மாடு முட்டி 3 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளனர். காவேரியின் தனேஷ்வரிநகரைச் சேர்ந்த சந்திரசேகர் கொடிஹள்ளி (70), பழைய பி.பி.  சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தபோது காளை அவிழ்த்து விடும் போட்டியில் பங்கேற்ற ஒரு காளை முட்டி உயிரிழந்தார். காவேரி தாலுகாவில் உள்ள தேவி ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த கனிசாப் பங்கபூர் (75) வீட்டின் அருகே காளை முட்டி உயிரிழந்தார். கனகல் தாலுகாவின் திலவல்லியைச் சேர்ந்த பரத் ஹிங்கமேரி (24) காளை அவிழ்த்து விடும் போட்டியைப்  பார்த்துக் கொண்டிருந்த போது காளை முட்டி உயிரிழந்தார்.  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி பிரலமானது. காளைகளின் பலம், காளைக்கு வழங்கப்படும் பயிற்சிகள், கொம்பின் கூர்மை மற்றும் பயமறி யாமல் வீரர்கள் காளையை அடக்கும் நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டு நிகழ்வுகளின் போது உயிர்ப் பலி நிகழ்கிறது. ஆனால் சாதாரண காளை ஊர்வலம், துணி கட்டப்பட்ட கொம்பு போன்றவற்றால் கர்நாடகாவில் 3 பேர்  பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. குறிப்பாக கர்நாடகா வின் ஒரே மாவட்டத்தில் (காவேரி) காளை ஊர்வலத்தில் 3 பேர் பலியாகி இருப்பது இது முதன்முறை என செய்திகள் வெளியாகியுள்ளன.