தருமபுரியில் தீக்கதிருக்கு 289 சந்தாக்கள் அளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் விளக்க பேரவைக் கூட்டம் மற்றும் தீக்கதிர் சந்தா அளிப்பு நிகழ்ச்சி தருமபுரி சாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 186 ஆண்டுச் சந்தா, 98 அரை ஆண்டு சந்தா என தீக்கதிருக்கு மொத்தம் 289 சந்தாக்களுக்கு உரிய தொகை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மூத்த தலைவர் பி. இளம் பரிதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.