tamilnadu

img

மாநிலம் முழுவதும் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

மாநிலம் முழுவதும் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

சென்னை, ஆக.5 - தமிழக அரசு மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல்  நிலையங்களை, ஆய்வாளர்கள் தலைமையில் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவின்படி, “தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில் 424 காவல்  நிலையங்கள் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. தற்போது உள்ள விதிகளின்படி, கொலை, இறப்பு விபத்துகள், கொள்ளை போன்ற கடும் குற்றங்களை ஆய்வாளர்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பின் படி குற்றங்களும் அதிகரித்து வருவதால், முதலமைச்சரின் அறிவிப்பின் படி 424 உதவி ஆய்வாளர்கள் நிர்வகிக்கும் காவல் நிலையங்களில், 280 நிலையங்கள் தரம்  உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நீண்ட காலமாக  பதவி உயர்வுக்காக காத்திருக்கும் சப்-இன்ஸ்பெக் டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் இனி எந்த சூழ்நிலையிலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வகிக்கும் நிலைக்கு தரம் இறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை யங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர மேம்பாட்டு பணிகளுக்காக 1,19,78,400  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.