திருத்தணி கோட்டத்தில் 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
திருவள்ளூர், அக்.23- வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதி களில் இடைவிடாது பெய்த மழையால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போனது. தொடர் மழைப்பொழிவால் திருத்தணி கோட்டத்தில் நீர்ப்பாசனத் துறைக்குச் சொந்தமான மொத்தம் 71 ஏரிகளில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆர்.கே.பேட்டையில் 16 ஏரிகளும், திருத்தணி யில் 7 ஏரிகளும், பள்ளிப்பட்டில் 3 ஏரி களும் நிரம்பி வழிகின்றன. மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. காலை முதல் இரவு வரை இடைவிடாது பெய்த மழையால் திருத்தணி நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை, காந்தி சாலை, ஆறுமுகசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கச்சேரி தெரு வில் கழிவுநீர்க் கால்வாய் அடைப்பு ஏற்பட்ட தால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்க, குடியிருப்பா ளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். சோர்ணவாரி பட்டத்தில் திறக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி யில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆக உயர்வு
சென்னை, அக்.23- தொடர் கனமழை காரணமாக வரத்து குறைந்து, சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் வியாழனன்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்று ரூ.70 வரை விற்கப்படுகிறது. மேலும் விலை உயருமோ என்ற அச்சத்தில் சந்தைக்கு வரும் மக்கள் அதிக அளவில் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். மழை காரணமாக ஏனைய காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. கேரட் மற்றும் அவரை தலா கிலோ ரூ.60 ஆகவும், முருங்கைக்காய் கிலோ ரூ.120 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
பாஜக உள்கட்சி மோதலில் மூவர் படுகாயம்
திருவள்ளூர், அக்.23- எல்லாபுரம் ஒன்றியம் பனையஞ்சேரி கிராமத்தில் பாஜக வினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பைச் சேர்ந்த ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பனையஞ்சேரி கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்த தனுஷ் (வயது 21) தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் பாஜக எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி செயலாளராக பணியாற்றியவர். இவ ருக்கும் இதே கிராமம் பிராமணர் தெருவில் வசிக்கும் பாஜக மாவட்ட விவசாயஅணி தலைவர் சேகர் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. செவ்வாய் இரவு தனுஷின் சித்தப்பா ராஜேஷ் என்பவரிடம் இதே கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ப வர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தனுஷ், ரமேஷ் (50), ஏழுமலை (38) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனுஷ் மற்றும் சேகர் ஆகியோர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியாக புகார் அளித்தனர். இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்த ராஜசேகர் (32), நவீன்குமார் (26), சுதாகர் (51), சேகர் (55), ரமேஷ் (50), தனுஷ் (21), ஆனந்தன் (38) ஆகிய ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவோ புதிய ஸ்மார்ட்போன்
சென்னை, அக்.23- விவோ இந்தியா ஆரி ஜின் ஓஎஸ் 6 (ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்டது) ஸ்மார்ட் போனை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்தில் இயங்கும் ஆரி ஜின் ஓஎஸ் 6, நவம்பர் மாத தொடக்கத்தில் பல்வேறு மாடல்களில் கிடைக்கும். அதைத்தொடர்ந்து X100 Pro, X100 &XFold 3 Pro மாடல்கள் நவம்பர் மாதம் 2வது வாரத்தில் வெளி யிடப்படும். ஆரிஜின் ஓஎஸ் 6,விவோவின் மிக வும் மேம்பட்ட செல்போன் ஆகும். இது மென்மையான தன்மை, வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவால் இயக்கப்படும் ஆற்றலை கொண்டுள்ளது.