நாகப்பட்டினத்தில் தீக்கதிருக்கு 256 சந்தாக்கள் அளிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் நாளிதழுக்கு 256 ஆண்டு சந்தா மற்றும் 84 அரையாண்டு சந்தா என மொத்தம் 340 சந்தாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான தொகை ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 500-ஐ, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனிடம், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.