tamilnadu

தீபாவளி பண்டிகை மருத்துவர்களுக்கு 24 மணி நேர பணி உத்தரவு

தீபாவளி பண்டிகை மருத்துவர்களுக்கு  24 மணி நேர பணி உத்தரவு

சென்னை, அக்.19 - தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் அக்.19, 20 ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து  மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், “தீபாவளியை யொட்டி தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏதேனும் அசம்பா விதங்கள் நடந்தால் dphepi@nic.in  என்கிற மின்னஞ்சலுக்கு தெரி விக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாநில அவசர கால செயல் பாட்டு மையத்தை 9444340496, 8754448477 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அழைப்பு பணியில் மருத்துவர்களுடன், 424 தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களும் சிறிய தீக்காயங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து கள் மற்றும் திரவங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால் முத லுதவி சிகிச்சை அளித்து உடனடி யாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவசர நிலைகளை கையாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.