tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சீமான் மீது வழக்கு பதிவு

அண்ணாநகர், அக்,19-  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருமங் கலம் காவல் நிலையத்தில்  வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளது. சீமான், கடந்தாண்டு நவம்பர் 17ம்தேதி செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, சட்டங்கள், திட்டங்களை நிறைவேற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றம் இருக்கும்போது எல்லா வற்றுக்கும் நீதிமன்றம் சொல்லிவிட்டது, நீதிமன்ற உத்தரவு என்று சொன்னால் எப்படி? சட்டமன்றமும் நாடா ளுமன்றமும் பல்லாங்குழி விளையாடவா இருக்கிறது என்று கேட்டார். சீமானின் இந்த பேச்சு தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தர வின்படி, இரண்டு பிரிவினரி டையே பகைமையை உரு வாக்கும் பேச்சு, பொது நன்மைக்கு தீமையை வழி வகுக்கும் அறிக்கை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி  ஊக்கத்தொகை பட்டுவாடா

புதுச்சேரி அமைச்சர் தகவல்  புதுச்சேரி,அக்.18- 2098 விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர்  அலுவலகம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலமாக, பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கவும், விவசாயி கள் பயிர் சாகுபடியில் முதலீடு செய்யும் இடுபொருட்கள் மற்றும் இதர பண்ணை செலவினங்களை சற்றே ஈடுகட்ட வும், பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பல்வேறு உட்பிரிவுகளில் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி  ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் ஊக்கத்தொகையில், கடந்த 2025 நவரைப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த புதுச்சேரி பகுதியினைச் சார்ந்த 1770 பொதுப்பிரிவு விவ சாயிகளுக்கு ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சத்து எண்ப தாயிரத்து தொண்ணூற்று நாற்பது ரூபாய் (Rs.1,32,80,940/-)  பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையும், அதே போன்று கடந்த 2025 ரபி பருவத்தில் எள் பயிர் சாகுபடி செய்த 328 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத் தொகையாக இருபத்தி இரண்டு லட்சத்து இருபத்தி நான்காயிரத்து என்னூற்று ஐம்பது ரூபாயும் (Rs.22,24,850/-),  அவர்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் கூட்டதொடரில், மத்திய அரசின் வழி காட்டுதலின் படி, ஊக்கத்தொகை பெறும் எந்த பயனா ளிக்கும் அவர்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் வெளி யிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஆதார் சார்ந்த நேரடிப் பணப்பட்டுவாடாவிற்கான பூர்வாங்க தொழில்நுட்ப பணிகள் முடியும் தருவாயில் உள்ளது எனவும் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயில் மீது ஏறி செல்பி மின்சாரம் பாய்ந்து மாணவர் படுகாயம்

கள்ளக்குறிச்சி,அக்.19 - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அமைச்சர்  கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (16) இவர் தனியார் பள்ளியில் ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் தீபாவளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்து ரீல்ஸ் போடுவதற்காக உளுந்தூர்பேட்டை ரயில் நிலை யத்திற்கு சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் டேங்கர் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த ரயில் மீது மாணவன் சதீஷ் குமார் எரி செல்போனில் தன்னை வீடியோ எடுத்துக் கொண்டி ருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற  மின்சார கம்பி மீது அவனது கை பட்ட போது  சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் அதிர்ச்சியடைந்த  நண்பர்கள் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து விரு தாச்சலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ரீல்ஸ் மோகத்தால் 11ஆம் வகுப்பு மாணவன் ரயில் மீது ஏறி வீடியோ எடுத்த போது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

பெரம்பூர், அக்,19-  டியூசனுக்கு சென்றபோது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தில கைது செய்து சிறுவர்கள் சீர்திருத் தப்பள்ளியில் சேர்த்தனர். சென்னை  கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த வர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டியூஷனுக்கு சென்றபோது அவரி டம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி யின் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தபோது அந்த நபர் தப்பி விட்டார். இதுகுறித்து சிறுமி பெற்றோரி டம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் சீதாராம் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். பின் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி சந்தையில்  2 ஆயிரம் ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி,அக்,19- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது சந்தையாக திகழ்கிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும்  சந்தையில் இங்கு தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடு களை வாங்க ஓசூர், சேலம், திருவண்ணா மலை, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராள மான வியாபாரிகள் குவிந்திருந்தனர். சந்தை யில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.