வாய்ப்பு வாசல்
கூட்டுறவுத் துறையில் 2,513 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை யில் மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பண்டக சாலைகள், நகர கூட்டுறவு வங்கி, பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், வேளாண்மை விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் செயலர், உதவியாளர், இளநிலை உதவியாளர், எழுத்தர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். மொத்தம் 2,513 காலிப்பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 32 வயது. பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சியும் நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ் நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப் படும் கூட்டுறவு மேலாண்மை நிலை யங்களில் பயிற்சி பெற்று, அவர்களால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றிருந்தால் வேண்டும். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்ப டையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: ஆகஸ்ட் 29, 2025. எந்த மாவட்டப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அக்டோபர் 11, 2025 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கூடுதல் விபரங்களுக்கு www.drbchn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கப்பற்படை அதிகாரி ஆகலாம்..!!
இந்தியக் கப்பற்படையில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக், சட்டம், கல்வித்துறை போன்ற பட்டப்படிப்புகளைப் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 260 இடங்களை நிரப்புகிறார்கள். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பிரிவுக்கும் மாறுபடும். இந்த விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்துப் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தேர்வு இருக்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : செப்டம்பர் 1, 2025 விண்ணப்பங்களை நிரப்புவதற்கான இணைப்புக்கும், கூடுதல் விபரங்களுக்கும் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாரத ஸ்டேட் வங்கியில் 6,589 பணியிடங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 6 ஆயிரத்து 589 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதில் 1,409 பின்னடைவுக் காலிப்பணியிடங்களும் அடங்கும். மொத்தப் பணியிடங்களில் தமிழ்நாட்டில் இருந்து 380 பணியிடங்களை நிரப்புகிறார்கள். வயது வரம்பு: குறைந்தபட்சமாக 20 வயதும், அதிகபட்சமாக 28 வயதும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட ஆகிய பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை : இரு கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் (Preliminary) தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் (Mains) தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும். முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளித்தேர்வில் உள்ளூர் மொழிப்பாடத்தை எடுக்காமல் படித்தவர்களுக்கு தகுதித்தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் 20, 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்ட் 6, 2025 முதல் விண்ணப்பங்களை நிரப்பும் பணி தொடங்கிவிட்டது. விண்ணப்பங்களை ஆன்லைனில் நிரப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 26, 2025 ஆகும். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இணைப்புக்கும், கூடுதல் விபரங்களுக்கும் https://sbi.co.in/web/careers/Current-openings என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.