16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்; தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
சென்னை, அக்.17 - தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடர் வெள்ளி யன்று நிறைவடைந்தது. கடைசி நாளான அக்.17 அன்று 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் இந்து சமய மற்றும் அற நிலையக் கடைகள் திருத்தச் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை மீதான வரி திருத்தம், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் திருத்தம், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்தம், தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணைய கூடுதல் செயற்பணிகள் திருத்தம், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டம் உட்பட மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அத்து டன் சட்டப்பேரவை கூட்டம் நிறை வடைந்தது. கடைசியாக பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழக சட்ட மன்றம் மீண்டும் கூடுவது குறித்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக தெரிவித்தார்.