tamilnadu

12 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

12 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித் துள்ள உத்தரவில், “திருப்பூர் நகர் குற்ற ஆவண காப்பகம் உதவி  கமிஷனராக இருந்த செங்குட்டுவன் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி  டிஎஸ்பியாக இருந்த ராகவி சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரி வுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் குற்றப்பிரிவில் இருந்த டிஎஸ்பி  செந்தில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக இருந்த  மணிமேகலை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை பெருநகர மேற்கு பயிற்சி மையத்தில் இருந்த முனுசாமி  சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி  கமிஷனராகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை யிட டிஎஸ்பியாக இருந்த பொன்ராஜ், சென்னை நுங்கம்பாக்கம் உதவி  கமிஷனராகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட  டிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் சென்னை தி.நகர் உதவி கமிஷன ராகவும், சென்னை பெருநகர நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷன ராக இருந்த பசுபதி, சென்னை செம்பியம் உதவி கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷன ராக இருந்த மகேந்திரன் சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமி ஷனராகவும், சென்னை பெருநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி கமிஷனராக இருந்த சித்தார்த் சங்கர் ராய் சென்னை பெருநகர நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராகவும், சென்னை செம்பி யம் உதவி கமிஷனராக இருந்த முஹேஷ் ஜெயகுமார் சென்னை மீனம்பாக்கம் உதவி கமிஷனராகவும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் சமூக ஊடக மையம் டிஎஸ்பியாக இருந்த  ரவீந்திரன் சென்னை அயனாவரம் உதவி கமிஷனராகவும் பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.