அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைப்பு
திருப்பூர், செப்.11- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத் தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை செய் வதற்கு 10 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 டன்கள் அரவைத் திறனுடனும், 2.15 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆண்டு அரவைத் திறனுடனும் ஆரம்பிக்கப் பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எரிசாராய உற் பத்தி ஆலையும், 30,000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட எத்தனால் ஆலையும் செயல் பட்டு வருகிறது. 60 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களின் காரணமாக அரவையின் போது அடிக்கடி ஏற்பட்ட இயந்திர கோளாறு களால் கடந்த 2023-24 அரவைப் பருவம் முதல் தற்காலிகமாக ஆலை இயங்காமல் இருந்து வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்த னர். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆக்.11 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியைச் சார்ந்த விவசாயிகள் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்கு வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பரிந் துரை செய்ய ஏதுவாக ஒரு வல்லுனர் குழு அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் புதனன்று சர்க்கரைத் துறை இயக்குநர் தலைமையில் கூடுதல் இயக்குநர், சர்க்கரைத்துறை, தொழில்நுட் பம் சார்ந்த உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானி கள், கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞா னிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆகி யோரை உள்ளடக்கிய பத்து உறுப்பினர்கள் கொண்ட வல்லுனர் குழு அமைத்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து, விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து அரசுக்கு உரிய அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த குழு அறிக்கையின் அடிப்படையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ரா.இராஜேந்திரன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆ.பாலதண்டபாணி கூறுகையில், அமராவதி சர்க்கரை ஆலையை புனர மைக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர் நடவடிக்கைகளால், கடந்த மாதம் உடுமலை வந்திருந்த முதலமைச்சர் அமராவதி சர்க்கரை ஆலையை புனர மைக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்தி ருந்தார். அதன் அடிப்படையில் தற்போது அர சாணை வந்துள்ளது. இதை கரும்பு விவசா யிகள் சங்கம் வரவேற்கிறது. அதேசமயம் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்க்கரை ஆலையை புனரமைத்து, முழு பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரி வித்தார்.