tamilnadu

4 ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்கு பட்டா!

4 ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்கு பட்டா!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஆக. 9 - நான்கு ஆண்டுகளில் 17 லட்சம்  பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ள தாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்  மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். அப்போது, 20,021 பயனாளிகளுக்கு 1,672 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டாக்களையும் வழங்கினார். பின்னர் இந்த விழாவில் உரை யாற்றிய முதலமைச்சர், “ஒரு மனித னுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம்” என்றும், இதில் “நிலம் எளிதாக கிடைத்து விடாது!” என்றும் குறிப்பிட்டார். “நிலமே அதி காரம்” என்றும், “காலுக்கு கீழ் சிறிது நில மும் தலைக்கு மேல் ஒரு கூரையும் பல ருக்கு கனவே!” என்றும் தெரிவித்தார். “திமுக ஆட்சிக்கு வந்த மே 2021  முதல் டிசம்பர் 2024 வரை 10 லட்சத்து  26 ஆயிரத்து 734 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காண உயர்நிலைக் குழு அமைத்து ஐந்து மாதத்தில் ஐந்து லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ண யித்தபோது, 7 லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்றுப்புற நகர்ப்புற பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கும் பட்டா வழங்க அரசாணை வெளியிட்டு 79,448 தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, 20,221 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. மொத்தமாக மே 2021 முதல் தற்போது வரை 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 41,858 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது” என்றும் முதலமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியால் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது” என்றும், 14 ஆண்டு களுக்குப் பின் கலைஞர் காலத்து  இரட்டை இலக்கை அடைந்துள்ளதாக வும் பெருமிதம் தெரிவித்தார். “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தை எதிர்ப்பது, வயிற்றெரிச்சல்!” என்று விமர்சித்தார்.