tamilnadu

img

அரசுத் துறையில் 1.5 லட்சம் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும்! மாநில உரிமைகள் மீட்பு; மகளிர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்!

அரசுத் துறையில் 1.5 லட்சம் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும்! மாநில உரிமைகள் மீட்பு; மகளிர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்!

சென்னை, மார்ச் 29 - 17-ஆவது சட்டமன்றத் தேர்தலுக் கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று அண்ணா அறிவாயலத்தில் வெளியிட்டார். 100-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் காகிதமல்ல, தமிழ கத்தை இந்தியாவின் முதன்மை மாநில மாக மாற்றும் ‘சூப்பர் ஸ்டார்’ திட்டம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.  மாநில சுயாட்சி மற்றும் ஆளுநர் பதவி நீக்கம்  இந்த அறிக்கையின் மிக முக்கிய மான அம்சமாக மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவ மீட்பு முன்னிறுத்தப் பட்டுள்ளது. இந்திய அரசியலமைப் பில் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப் பைக் குறைத்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதை திமுக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆளுநர் பதவி யை முற்றிலும் நீக்க அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றும், ஆளுந ருக்குப் பதில் அந்தந்த மாநிலப் பல் கலைக்கழக வேந்தராக அந்த மாநில முதலமைச்சரே நியமிக்கப்படும் சட்ட நடைமுறை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பகிர்வில் மாநிலங்களுக்கான உரிமை யை நிலைநாட்ட, ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கினை 50  விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்தத் தேவையான அனைத்துப் போராட்டங்களும் முன்னெடுக்கப் படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்வி உரிமை மற்றும் நீட் ரத்து  கல்வித் துறையைப் பொறுத்த வரை, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டி யலுக்குக் கொண்டு வரவும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ‘நீட்’ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்யத் தொடர்ந்து போராடும் என்றும் திமுக உறுதி அளித்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1.5 லட்சம் பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும். தனி யார் துறையில் ஆண்டுக்கு 20 லட்சத் திற்கும் மேல் ஊதியம் பெறும் உயரிய பணிகளில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்து வம் வழங்க முன்வரும் நிறுவனங் களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்; மேலும், உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர் களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,500 ரூபாய் உத வித்தொகையுடன் 6 மாத கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 35 லட்சம் மாண வர்களுக்குப் புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.  ‘இல்லத்தரசி’ கூப்பன் மற்றும் உரிமைத்தொகை உயர்வு  தமிழகப் பெண்களின் பொருளா தாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாயை, 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க இந்த  அறிக்கை வழிவகை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, “இல்லத்தரசி” என்ற  புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத எளிய குடும்பங்களின் இல்லத்தரசிகள் தங்களுக்குத் தேவை யான வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற  வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பத் திற்கும் 8,000 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு ‘கூப்பன்’ வழங்கப்படும். மேலும், கல்லூரி மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தின் ஊக்கத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களின் நல னுக்காக 1,000 நவீன குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.  வேளாண்மை மற்றும்  உழவர் நலத் திட்டங்கள்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயாகவும் உயர்த்த ப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். பால் கொள் முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதி கரிக்கப்படும். பேரிடர் காலங்களில் பயிர் இழப்பீடு ஹெக்டேர் ஒன்றுக்கு நெல்லுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்ட காலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ கத்தின் நிகர சாகுபடி பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்துவதே இலக்கு என திமுக அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீர் மேலாண்மை மற்றும் வேளாண் வளர்ச்சித் திட்டங் களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித்தொகை உயர்வு  சமூகத்தின் விளிம்புநிலை மக்க ளின் நலனுக்காக, முதியோர் உதவித் தொகை 2,000 ரூபாயாகவும், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும். முதல மைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்