தஞ்சாவூர், பிப்.26- பழங்கால ஓலைச்சுவடிகள் வைத்திருப்ப வர்கள், அவற்றை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்க லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிச்சந்திர புராணம், பூர்வராசன் கதை, கர்ணன் அடைக்கல கும்மி, பிள்ளை யார் சிந்து உள்ளிட்ட நான்கு தொகுப்பு களோடு சில உதிரிப் பாடல்கள் கொண்ட அரிச்சுவடிகளை தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், மாநகரச் செயலாளர் எஸ்.எல்.ஸ்ரீதர் ஆகியோர் நூலக நிர்வாக அதிகாரி முத்தையா, தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன், தற்காலிக ஊழியர் க.முரளி ஆகியோரிடம்வழங்கினர். அரிச்சுவடிகள் குறித்து தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உலகின் இரண்டாவது பழமையான நூலகம், ஆசியாவில் முதல் பழமையான நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்கம் திருச்சிராப்பள்ளியில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்திய போது, மருத்துவர் கோபால்,
தனது நண்பரும் மருத்துவருமான கோபால்ராஜு என்பவர் அளித்த ஓலைச் சுவடிகளை செந்தலை கவுதமனிடம் கொடுத்து, அதை உரியவரிடம் சேர்க்கக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஓலைச்சுவடிகளை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு வழங்குவதற்கான முன்னெடுப்புகளை எழுத்தாளர் முத்துநிலவன் மேற்கொண்டார். அதனடிப்படையில் தமுஎகசவினர் அதை நூலகத்திற்கு வழங்கியுள்ளனர்” என்றார். தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் கூறுகை யில், “சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தச் சுவடிகள் மருத்துவர் கோபால்ராஜு பெயரில் நூலகத்தில் அட்டவணைப்படுத்தப் படும். இதுபோல் யார் வீட்டிலாவது, அல்லது நண்பர்கள் வீடுகளில் பழைய சுவடிகள் இருந்தால் அதை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திற்கு வழங்கலாம். கொடுப்பவர் பெயரிலேயே அந்தச்சுவடி உரிய முறையில் பாதுகாக்கப்படும். சுவடி களை வழங்கியவர்கள் குடும்பத்தினர் எதிர்காலத்தில் பார்க்க விரும்பினால் நூல கத்தில் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவர்” என்றார்.