tamilnadu

img

இடையாத்தி, பட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இடையாத்தி, பட்டுக்கோட்டையில்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூர், ஜூலை 21-   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட, பட்டுக்கோட்டை ஊராட்சி கொண்டிகுளம், கழுகுபுலிக்காடு, பண்ணவயல், நடுவிக்கோட்டை ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கொண்டி குளம் அன்பு திருமண மண்டபத்திலும், பேராவூரணி ஊராட்சிக்குட்பட்ட இடையாத்தி, வாட்டாத்திக்கோட்டை, பூவாளூர் ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகை யில், வாட்டாத்திக்கோட்டை கே.பி.எஸ்.திருமண மண்டபத்திலும், “உங்களுடன் ஸ்டாலின்’’ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், உதவி இயக்குநர் (தணிக்கை) பாஸ்கரன், வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை), சுந்தர மூர்த்தி (திருவோணம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.