‘கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்’
பிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும். சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஏரியா செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ராசி ரவிக்குமார் உட்பட பலர், கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.