tamilnadu

விவசாயிகளை சிறப்பித்து பொங்கல் விழா

புதுக்கோட்டை, ஜன.14-  விவசாயிகளை சிறப்பித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று பொங்கல் விழா நடை பெற்றது. பொங்கல் விழா வினைத் தொடங்கி வைத்து மவாட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: ‘நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவரின் வரிகளை முழுமையாக பின்பற்றக் கூடிய கலாச்சாரம் தமிழர்க ளுடையது. நாம் உண்ணு கின்ற உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதற்கொண்டு, வயலில் உழ வுத் தொழில் ஈடுபடுகின்ற காளைகள் வரை அனைத் திற்கும் நன்றி செலுத்துகின்ற ஒரே பண்பாடு நமது தமிழர் பண்பாடு.  அதனடிப்படையில் விவசாயிகளை சிறப்பித்து இங்கே இந்த பொங்கல் விழா கொண்டாப்படுகிறது. விவசாயிகளின் உற்பத்தி பெருகவும், அதனால் அனை த்து தரப்பு மக்களின் வாழ்வு வளம்பெறவும் இந்த பொன்னான நாளில் வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  முன்னதாக விவசாயிக ளுக்கு கதர் ஆடை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார் கள். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது டன்  அரசு அலுவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டச் செயலாளர் எஸ். பொன்னுச்சாமி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;