tamilnadu

img

என்பிஆர், என்ஆர்சி அமல்படுத்த முடியாது

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்

கேரள அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம், ஜன.20- தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப் பித்தல் தொடர்பான நட வடிக்கைகள் கேரளத்தில் மேற்கொள்ளவோ, இதில் ஒத்துழைப்பதோ சாத்திய மில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர்  மற்றும் மக்கள் தொகை கணக்கெ டுப்பு ஆணையருக்கு தெரி விக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அச்சத் தைத் தணித்து, சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும் என் பது அரசமைப்பு சாச னத்தின்படி அரசின் பொறு ப்பு என்கிற அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஆனால், மக் கள் தொகை கணக்கெடுப் புக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) தேசிய குடியுரிமை பதிவேடுக்கு (என்ஆர்சி) வழிவகுக்கும் செயலாகும். எனவே, பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய மக் கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை மாநிலத்தில் அமல்படுத்தினால் அது பர வலான பாதுகாப்பின் மைக்கு காரணமாகிவிடும். இதுவரை தேசிய குடி யுரிமை பதிவேடு தயாரித்த மாநிலங்களின் அனுபவம் இதற்கு உதாரணமாகும். தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாநி லத்தின் சட்ட ஒழுங்கை மோச மாக பாதிக்கும் என மாநில காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்போடு (சென்சஸ்) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்க முயன்றால் கணக்கெடுப்பு (சென்சஸ்) பணியைக்கூட முறையாக நடத்த முடியாமல் போய் விடும் என மாவட்ட ஆட்சியர் கள் அரசிடம் தெரிவித்துள்ள னர். குடியுரிமை திருத்த சட் டம் குறித்து (சிஏஏ) அரச மைப்பு சாசன வாய்ப்புகளை ஆய்வு செய்து அரசமைப்பு சாசனத்தின் 131ஆம் பிரி வின்படி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள் ளது.

கேரளத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியை ஏற்க னவே மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய குடி யுரிமை சட்டமும் குடியுரிமை பதிவேடும் அமல்படுத்து வதற்கான  மத்திய அரசின் முடிவு மக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக- மத- சமுதாய அமைப்பு களின் தலைவர்களின் கூட் டம் டிசம்பர் 29இல் முதல்வ ரின் அழைப்பின் பேரில் நடந் தது. மக்களின் அச்சத்தை இந்த கூட்டமும் பகிர்ந்து கொண்டது. தொடர்ந்து சட்ட மன்ற கூட்டம் நடத்தப்பட் டது. குடியுரிமை திருத்த சட் டத்தை ரத்து செய்ய வேண் டும் என ஏகமனதாக மத்திய அரசை அக்கூட்டம் கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சி யாகத்தான் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அமைச்சரவை கூட்டத் தில், உள்ளாட்சி அமைப்பு களில் வார்டுகளின் எண்ணிக் கையை அதிகரிப்பதற்கான வார்டு வரையறை மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டது. அதன்படி கேரள பஞ்சா யத்து ராஜ் சட்டமும், நகராட்சி சட்டமும் திருத்தம் செய்யப் படும்.  

ஜன.30 முதல் சட்டமன்ற கூட்டம்      

  ஜனவரி 30 முதல் கேரள சட்டமன்ற கூட்டம் நடத்த ஆளுநருக்கு பரிந்துரைப் பது என திங்களன்று நடந்த கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

 

 

;