tamilnadu

img

மகாத்மா காந்தி சிலைக்கு  பெரம்பலூர் ஆட்சியர் மரியாதை

 பெரம்பலூர், அக்.2- பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சி யர் வே.சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரி யத்தின் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கதர் சிறப்பு விற்பனையில் சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கதர்ஆடைகள் விற்பனை செய்யப் பட்டன. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு கடன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.