tamilnadu

img

மோடியை பகிரங்கமாக விமர்சித்த கர்நாடக பாஜக எம்எல்ஏ

பெங்களூரு:
பீகார் மழை - வெள்ளத்தால், பாட்னா நகரமே தத்தளிப்பது பற்றி, பிரதமர் மோடி அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். “பீகார் வெள்ள நிலவரம் பற்றி முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேசினேன். மாநில அரசோடு சேர்ந்து மத்திய அரசின் அமைப்புகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு எல்லாவகையிலும் பீகாருக்கு உதவும்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், மோடியின் இந்த ட்விட்டர் பதிவை, விஜயபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ பசன கவுடா பாட்டில், விமர்சித் துள்ளார்.“பிரதமர் பீகார் வெள்ளம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டதைப் பார்த்ததும் சமூக தளங்களில், ‘பிரதமர் கர்நாடக வெள்ளத்தைப் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லையே ஏன்? கர்நாடகாவில் இப்போதைக்கு தேர்தல் எதுவும் வரவில்லை என்பதாலா?’ என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். கட்சி இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவின் தென் பகுதியில் பாஜகஇழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று பசன கவுடா எச்சரித்துள்ளார்.

அத்துடன், பாஜக தலைமை எடியூரப்பாவை புறக்கணித்து வருவதையும் பசன கவுடா விமர்சித்துள்ளார்.“கர்நாடக பாஜக-வைப் பொறுத்தவரை இரு அதிகார மையங்கள் இருக்கின்றன. ஒன்று தில்லியிலும், ஒன்றுபெங்களூருவிலும் இருக்கின் றன. இதில் தில்லி அதிகாரமையம் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் வாழ்வை முடித்துவிட நினைக்கிறது. இது கட்சிக்குள்ளேயே ஒருவரை அழிப்பதற்காக இலக்கு வைத்து நடக்கும் அரசியல். தில்லி தலைமை நினைத்துவிட்டால் ஒரு தனி நபரின் அரசியலை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் கர்நாடகாவின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்றும்பசன கவுடா ஆவேசம் காட்டியுள்ளார்.பசன கவுடா, முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்என்ற நிலையில், அவரின் இந்தகருத்து எடியூரப்பாவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.அண்மையில் “இந்தி மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும்” என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியபோது, அதற்கு கர்நாடக பாஜக தலைவரும், முதல்வருமான எடியூரப்பா வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;