tamilnadu

img

காஷ்மீர் வரைபடத்திற்கு காவி தலைப்பாகை அணிவிப்பு!

புதுதில்லி:
இந்திய வரைபடத்தில், காஷ்மீர் காவித் தலைப்பாகை அணிந்திருப்பது போல, நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்கியததற்கு பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை சமூக வலைத் தளங்களில் தெரிவித்தனர்.அந்த வகையில், தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக அறியப்படும் அமலா பாலும் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரவேற்கத் தக்கது என்று அவர் கூறியிருந்தார்.கருத்தோடு நில்லாமல், இந்திய வரைபடத்தில் காஷ்மீரின் தலையில் காவித் தலைப்பாகை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் சமூக வலை தளத்தில் வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை அமலுக்கு கொண்டு வர முடியும் என்றுபாராட்டியிருந்தார். அமலா பாலின்இந்த பதிவுக்கு, தற்போது பல்வேறு தரப்பி லிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

;