tamilnadu

img

நாம் அஞ்சவில்லை... ஜேஎன்யு மாணவர்க்கு தீபிகா படுகோனே வாழ்த்து

புதுதில்லி:
தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்குள், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த முகமூடி குண்டர்கள், நள்ளிரவு நேரத்தில் திடீரென புகுந்து, அங்குள்ள மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு, மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தினர். 

நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் - நடிகைகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நாட்டில் மாடுகளுக்கு உள்ளபாதுகாப்பு கூட மாணவர்களுக்கு இல்லைஎன்று பாலிவுட் நடிகை டிவிங்கிள் கண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். நடிகர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோர் ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கே சென்று, அங்கு போராடும் மாணவர்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். 

இந்நிலையில், எதிர்பாராத வகையில் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே-வும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு சென்று, போராடும்மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித் துள்ளார்.செவ்வாயன்று இரவு 7:30 மணிக்குபல்கலைக்கழகத்தின் தென்மேற்கு கேட் வழியாக உள்ளே நுழைந்த தீபிகா,சுமார் 15 நிமிடங்கள் வரை போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷைகட்டியணைத்து தனது ஆறுதலை வெளிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, ஜேஎன்யு-விற்குசென்றது குறித்து, என்.டி.டி.வி ஊடகத்துக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ள தீபிகா படுகோனே, “நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண் ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். போராட்டம் பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம்சிந்திக்கிறோம் என்பது உண்மை என்றுநினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். “மாணவர்களுக்காகக் குரல்கொடுக்கவும் தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கிநின்று போராடுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக் கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

;