tamilnadu

img

மே மாத முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள் ரத்து... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு 

திருப்பதி
நாட்டின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மாதம் 20-ஆம் தேதி மூடப்பட்டது. கோவில் மூடப்பட்டாலும் பூஜைகள் வழக்கமாக நடைபெறுவதாகத் தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 14-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்படுமா இல்லை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தளர்த்துமா என்ற சந்தேக எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது. இதனால் திருப்பதி கோவிலில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த மே மாத தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும்,தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

மேலும் ரத்து செய்த டிக்கெட்டுகளான பணத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடர்பான அறிவிப்பு நாளை தொடங்கியிருந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

;