tamilnadu

உஜ்வாலா யோஜனா தோல்வித் திட்டமே!

புதுதில்லி, ஏப்.8-

சமையலுக்கு சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எல்பிஜிசமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது. இந்நிலையில், மோடி பதவிக்கு வந்ததும், இந்த திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (ஞஆருலு) ’ என்று புதிய பெயரைச் சூட்டி, எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், எல்பிஜி சமையல் எரிவாயு பயன்படுத்தும் 8 கோடி ஏழை குடும்பங்களில் 80 சதவிகித குடும்பங்கள் ‘பிஎம்யுஒய்’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்று அறிவித்தது மத்திய அரசு. ஆனால், எரிசக்தி குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட தனியார் ஆய்வுநிறுவனங்கள், மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளன.பொதுவாக பிஎம்யுஒய் திட்டத்தில்,முதல்முறை மட்டும்தான் எல்பிஜிசிலிண்டர் இலவசமாகக் கொடுக்கப் படும்; அது தீர்ந்து போனதும், அடுத்த சிலிண்டரை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு அவர்ளுக்கான மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதுதான் நடைமுறை.ஆனால், மோடி எதிர்பார்த்ததைப் போல, ஏழை குடும்பங்களால் சந்தை விலையில் சிலிண்டரை வாங்க முடியவில்லை. ஏனெனில் எரிவாயு தேவைப் படும் நேரத்தில் அவர்களிடம் கையில்போதிய பணம் இருக்காது. இதனால் எல்பிஜி சமையல் எரிவாயுவை ப் பயன்படுத்தும் குடும்பங்களில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அது வெறும் 24 சதவிகிதக் குடும்பங்கள் என்று தனியார் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

;