tamilnadu

img

“ஜெய் ஸ்ரீராம்” கூறச்சொல்லி முஸ்லிம் டாக்சி ஓட்டுநரைக் கொன்ற குண்டர்கள்...

புதுதில்லி:
உத்தரப்பிரதேச நெடுஞ்சாலையில் தில்லியைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்  அப்தாப் ஆலம் என்பவர், காரில் பயணம் செய்த குண்டர் கும்பலால் “ஜெய் ஸ்ரீராம்” என கூறச்சொல்லி கொலை செய்யப்பட்டார் என்று கொலையுண்டவரின் மகன் தெரிவித்துள்ளார். தில்லியிலிருந்து ஞாயிறன்று கிரேட்டர் நொய்டா சென்ற டாக்சி ஓட்டுநர், பயணியை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது மூன்றுஅடையாள தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறினர். எனினும், இறந்தவரின் குடும்பத்தினர் இது குண்டர் கும்பல்களின்கைவரிசை என்று குற்றஞ்சாட்டும் அதே சமயத்தில்,  காவல்துறையினர் இதனை எவ்விதமான வெறுப்புக் குற்றக் கோணத்திலும் பார்க்க முடியாது எனக் கூறி அதனை மறுக்கின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் கௌதம் புத்தாநகரில் பதல்பூர் காவல் நிலையத்தில், கொலையுண்ட அப்தப் அலம் என்பவரின்மகன் முகமது சபிர் அளித்துள்ள முறையீட்டின்கீழ்  பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, தில்லி திரிலோக்புரியைச் சேர்ந்த அப்தப் அலம்,புலந்சாகரிலிருந்து திரும்பி வருகையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப் பட்டார்.சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு  அப்தப் அலம், தன் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசுகையில், தான் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வந்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். “சுமார் 8 மணியளவில் அவர் என்னை தத்ரி டோல் பிளாசாவிலிருந்து என்னை அழைத்து,அவருடைய ஃபாஸ்டாக் (FASTag) கட்டணத்தைச் செலுத்து மாறு கேட்டுக்கொண்டார்.   நான்அதைச் செய்துவிட்டு அவரைஅழைத்தபோது, அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை. அந்தசமயத்தில் காரில் அவர்வேறுசிலருடன் பேசிக்கொண்டிருப்பது என் காதில் விழுந்தது. அந்த நபர்கள் போதையில் பேசுவதுபோல் வாய் உளறலுடன் பேசினார்கள்,” என்று சபிர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்தப் அலம் வைத்திருந்த இரண்டு மொபைல் போன்களும், 3500 ரூபாய்பணத்தையும் காணவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தில்லி பல்கலைக் கழக மாணவரான சபிர், இந்த சம்பவம் தொடர்பாக திங்கள் கிழமையன்று, கூறுகையில், தன்னுடைய தந்தையை,மது குடிக்கக் கட்டாயப்படுத்தி, அவரை “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் என்றும், பின்னர் அவரைக் கொன்றிருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். “நான்பதிவு செய்துள்ள ஆடியோவில் இது தெளிவாக பதிவாகியிருக்கிறது. அவரும் “ஜெய்ஸ்ரீராம் போல்” என்று சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் அவருடைய தொலைபேசி ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுவிட்டது. அதனை நான் காவல்துறையின ருக்கு அளித்திருக்கிறேன். ஆனாலும் இதனை குண்டர்கும்பல்கோணத்தில் எடுத்துக்கொள்ள வில்லை.  என் தந்தை திரும்பிவரும்போது கிரிமினல் பேர்வழிகள் காருக்குள் வலுக்கட்டாய மாக உட்கார்ந்து, அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தபின்னர் அவரைக் கொன்றிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அவருடைய தலை, முகம், கழுத்து ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதும் நன்றாகத் தெரிகிறது,” என்று சபிர் கூறினார். வழக்கைக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். கொலை செய்தவர்களைப் பிடித்துவிடுவோம் என்று கூறுகின்றனர்.  (ந,நி.)

;